நோர்வேயில் தியாகி அன்னைபூபதியம்மாவின் உருவச்சிலை திறப்பு!


இன்று நோர்வே அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் தலைமை வளாகத்தில் அன்னைபூபதியின் உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் மிகப்பெரும் வகி பாத்திரத்துக்கு,வரலாற்று நிகழ்வுக்கு ஒரு பெரும் அடையாளம் அன்னை பூபதி.
அன்னை பூபதிக்கு நோர்வே ஒஸ்லோவில் அமைந்திருக்கும் அன்னை பூபதி கல்வி வளாகத்தினுள் உருவச் சிலை திறந்துவைக்கப்பட்டது.இவ் ஒழுங்கினை  நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் அன்னை பூனதி கலைக்கூட மாணவர்கள் .ஆசிரியர்கள்  பெரியோர்களால் ஒழுங்கமைக்கப்பட்டது.
அன்னை பூபதியின் சிலையும் அதன் கீழே இருக்கும் பீடத்தில் ‘ வரலாறு தெரிந்த இனமே வரலாறு படைக்கிறது என்ற வாசகமும் கொண்ட இந்த சிலை 24.03.2018 சனிக்கிழமை மாலை 2மணியளவில் ஒஸ்லோ அன்னை பூபதி தமிழ்கலைக் கூடத்தினுள் திறந்து வைக்கப்பட்டது.
(செய்தியாளர் நாகலிங்கம் மனோ)


இணைப்பு செய்தி 

 அன்னை பூபதிக்கு நோர்வே ஒஸ்லோவில் உருவச் சிலை!
Powered by Blogger.