பாதுகாப்பு செயலாளர் ரஷ்யாவுக்கு பயணம்!

பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன, ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளாரென, பாதுகாப்பு அமைச்சு மற்றும் ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தகவல்கள் தெரிவிக்கிறன.
எனினும், இந்தப் பயணம் தொடர்பான உத்தியோகபூர்வத் தகவல்கள் அரசாங்கத்தால் இதுவரை வெளியிடப்படவில்லை.
அதேவேளை, இழுபறிக்குள்ளாகியிருக்கும், ரஷ்யாவிடம் இருந்து ஜிபார்ட் 5.1 ரக போர்க்கப்பல் மற்றும் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு உடன்பாடு தொடர்பாக பேச்சுக்களை நடத்தவே, பாதுகாப்புச் செயலாளர், ரஷ்யா சென்றிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
Powered by Blogger.