மின்சாரம் தாக்கியதில் காட்டு யானை உயிரிழப்பு!

வெல்லவாய், ரன்தெனிய பிரதேசத்தில் இன்று அதிகாலை மின்சாரம் தாக்கியதில் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. 

இந்தய யானை மற்றொரு காட்டு யனையுடன் இணைந்து பாரிய மரம் ஒன்றை வீழ்த்த முயற்சித்த போது அருகில் இருந்த உயர் அழுத்த மின்கம்பி ஒன்றுடன் இணைந்து மரம் விழுந்துள்ளதுடன், இதன்போது யானை மீது உயர் அழுத்த மின்சாரம் தாக்கியுள்ளது. 

உயிரிழந்த யானை 15 இற்கும் 25 இற்கும் இடைப்பட்ட வயதையுடையது என்று வன நீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கிருந்தை கங்கைக்கு மேலால் இந்த உயர் அழுத்த மின் விநியோக கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதுடன், இதனால் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அந்த கங்கையில் மீன்கள் உயிரிழந்து மிதப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸ் மற்றும் வெள்ளவளை தள வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Powered by Blogger.