பாலியாற்றின் கரையோரப்பகுதிகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை!

முல்லைத்தீவு, வவுனிக்குளத்திற்கு நீரைக்கொண்டு வருவதற்கும் மேலதிக நீரை வெளியேற்றுவதற்குமாக அமைந்துள்ள பாலியாற்றின் கரையோரப்பகுதிகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வவுனிக்குள நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட தமிழீழம் ,முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றாகக் காணப்படுகின்ற வவுனிக் குளத்திற்கு நீரைக்கொண்டு வருகின்ற பாலியாற்றுப் பகுதியின் கரையோரப் பகுதிகளையும் அதேபோல வவுனிக்குளத்தின் கலிங்குப்பகுதியால் வெளியேறுகின்ற மேலதிக நீரைககொண்டு செல்கின்ற கழிவு வாய்க்காலான பாலியாற்றின் கரையோரப்பகுதிகளையும் ஆற்றினையும் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தள்ள நீர்ப்பாசனத்திணைக்களம் குறித்த ஆற்றின் 132 அடி அகலமுடைய கரையோரப்பகுதிகளை பாதுகாக்கும் வகையில் எல்லைக்கற்கள் இடப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு கரையோரரப்பகுதிகளை அத்துமீறி காணிகளை சுவிகரிப்போருக்கு எதிராக சட்டநடவடிக்கைகளுக்க உட்படுத்த இருப்பதாகவும்நீர்;பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது. 
Powered by Blogger.