வவுனியாவில் அரசியல் கைதியின் விடுதலைக்காக கையெழுத்து போராட்டம்!

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக கையெழுத்து போராட்டம் வட தமிழீழம் , வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் மனைவி ஆனந்த சுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.

இவரின் இறுதிக் கிரியைகள் கிளிநொச்சி, மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றபோது மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மூன்று மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டு மனைவியின் மரண சடங்கில் கலந்து கொண்ட பின் மீண்டும் காவல்துறையினரால் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.இதன்போது தந்தை சிறைச்சாலை வாகனத்தில் ஏறியபோது அவரது மகளும், தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் அனைவரது மனதையும் நெகிழ வைத்துள்ளது.

நீதிமன்றின் ஊடாக 97 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்த சுதாகருக்கு மகனும், மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

எனவே இவரை நிபந்தனையற்ற பொது மன்னிப்பில் மைத்திரி விடுதலை செய்யக்கோரி வவுனியா மாவட்டத்தில் இன்று கையெழுத்து போராட்டம் மாவட்ட சுயாதீன இளைஞர்களின் தமிழ் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.Powered by Blogger.