துப்பாக்கி குண்டு துளைக்காத எண்ணெய்!

இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குண்டு துளைக்காத எண்ணெய் ஒன்றை உருவாக்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
ஹொரணை உதுருதுடுவ என்னும் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு குண்டு துளைக்காத எண்ணெய்யை உருவாக்கியுள்ளார்.
நீண்ட நாட்களாக மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில் இந்த தைலம் அல்லது எண்ணெய் வகையை உருவாக்கியதாகவும், பண்டைய குருக்களின் மந்திர தந்திரங்களைப் பயன்படுத்தி இந்த எண்ணெய் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணெய் போத்தலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், அது எண்ணெய் போத்தல் மீது படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
விஸ்ணு கிராந்தி தைலம் என இந்த எண்ணெய்க்கு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணெய் போத்தலுக்கு எவரினாலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு லாப நோக்கிலும் இதனை உருவாக்கவில்லை எனவும், சட்ட ரீதியான தேவைகளின் போது இந்த எண்ணெய்யை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த எண்ணெயின் மகிமை தொடர்பில் எவ்வித விஞ்ஞானபூர்வமான நிரூபணங்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.