சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய பெண் சடலமாக மீட்ப்பு!

சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாழைச்சேனை – கிரான்பற்று பகுதியிலுள்ள மகாவலி கிளை ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
வீட்டுப் பணிப்பெண்ணாக சவுதி அரேபியாவில் பணியாற்றிய குறித்த பெண் சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார் எனவும், ஆனால் அவர் வீட்டுக்கு வருகை தராத நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா, கணேசபுரம் மரக்காரம்பளை வீதியைச் சேர்ந்த இராமலிங்கம் மருதை சுதர்சினி (வயது 33) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.
குறித்த பெண்ணின் தலையில் பலமாக வெட்டப்பட்ட காயம் காணப்படுவதால் அவர் கொலைசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நேரில் சென்று சடலத்தைப் பார்வையிட்ட வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஹபீப் றிபான் சடலத்தை சட்டவைத்திய அதிகாரியின் உடற் கூற்றுப்பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைவக்கு அனுப்பி வைக்குமாறு வாழைச்சேனைப் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எஸ். பெரமுனவுக்கு உத்தரவிட்டார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.