இலங்கை குறித்த விவாதம்: ஜெனிவாவில் ஏமாற்றம்!

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37வது
கூட்டத்தொடரில், இன்று நடைபெறவிருந்த இலங்கை தொடர்பான பூகோள காலமீளாய்வு விவாதம், பிற்போடப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பணியாளர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினாலேயே, இந்த நிலை ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் போராட்டத்தினால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று நடைபெறவிருந்த அனைத்து விவாதங்களும் பிற்போடப்பட்டன. பேரவை விவாதம் நடைபெறும் பகுதி வெறிச்சோடிக் கிடக்கிறது.
அதேவேளை, ஐ.நா வளாகத்தில் இன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த முறைசாராக் கூட்டங்கள், பக்க அமர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பேரவையில் நடைபெறுவதாக இருந்த விவாதங்கள், வேறொரு நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.