தகவல்கள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்தும் வகையில் கூகுள் நியூஸ் இனிஷியேட்டிவ்!


சர்வதேச நம்பகத்தன்மை சரிபார்க்கும் அமைப்புடன் (International Fact Check Network) இணைந்து கூகுள் புதிய திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. சர்வதேச நம்பகத்தன்மை சரிபார்க்கும் அமைப்பு போலி செய்திகள் மற்றும் தகவல்களை பிரித்தெடுக்க மேம்படுத்தப்பட்ட டூல்களை சர்வதேச அளவில் சுமார் 20,000க்கும் அதிகமான மாணவர்களுக்கு வழங்கும்.
கூகுள் துவங்கியிருக்கும் புதிய திட்டம் உண்மையான செய்திகளிடையே பரப்பப்படும் போலி தகவல்கள் மற்றும் செய்திகளை பிரித்து எடுப்பதே ஆகும். முக்கியமாக அவசர செய்திகளை வழங்கும் போது இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமானதாகியுள்ளது. போலி செய்திகளை தடுக்கும் முயற்சியில் கூகுள் மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது.
அந்த வகையில் வரும் மாதங்களில் இந்த திட்டத்தில் மட்டும் சுமார் 30 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச அளவில் கூகுள்.ஓ.ஆர்.ஜி (Google.org) சார்பில் இதற்கான சவால்களை எதிர்கொள்ள 10 கோடி அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட இருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் செய்திகளுக்கு சந்தாதாரர் ஆகும் முறையை மேம்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் கூகுள் அக்கவுண்ட் கொண்டு செய்திகளுக்கு சந்தாதாரர் ஆக முடியும். இதனால் பயனர் விவரங்களை கூகுள் தானாக எடுத்துக் கொண்டு பணம் செலுத்தும் முறைக்கு ஏற்ப சந்தாதாரர் ஆகும்.
பயனர்கள் விரும்பும் வலைத்தளத்தில் காணப்படும் சப்ஸ்கிரைப் (Subscribe) ஆப்ஷனை கிளிக் செய்ததும், குறிப்பிட்ட வலைத்தளத்திற்கு சந்தாதாரர் ஆக முடியும், இதற்கான கட்டண முறை மிகவும் பாதுகாப்பானதாகவும், தனித்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும். சந்தாததாரர் ஆன பின் கூகுள் கணக்கை கொண்டு லாக் இன் செய்து கொள்ள முடியும். எனினும் கட்டண பணிகளை கூகுள் செய்து கொண்டு, பண பரிமாற்றத்தை பாதுகாப்பானதாக

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.