நாகேஸ்வரனின் பூதவுடல் நாளை கிளிநொச்சி மக்களின் அஞ்சலிக்கு!

மறைந்த கண்டாவளை பிரதேச செயலாளர் அமரர் கோபாலபிள்ளை நாகேஸ்வரனின் பூதவுடல் கிளிநொச்சி மக்களின் அஞ்சலிக்காக பரந்தன் பொது நோக்கு மண்டபத்தில் நாளை  வியாழக்கிழமை வைக்கப்படவுள்ளது என கிளிநொச்சி மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

 கடந்த திங்கள் கிழமை கண்டாவளை பிரதேச செயலாளர் அமரர் கோ. நாகேஸ்வன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரின் உடல் தற்போது யாழ்பாணத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை வியாழக்கிழமை முற்பகல் 11 மணி தொடக்கம் ஒரு மணிவரை பரந்தன் சந்திக்கருகில் அமைந்துள்ள பரந்தன் பொது நோக்கு மண்டபத்தில் கிளிநொச்சி மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதி நிகழ்வுக்கு யாழ்பாணம் எடுத்துச் செல்லப்படும் எனவும் மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

Powered by Blogger.