முல்லைத்தீவில் இராணுவச் சிப்பாயிடமிருந்து துப்பாக்கி பறிமுதல்!

முல்லைத்தீவு ஆண்டாங்குளம் காட்டுப்பகுதியில் இராணுவச் சிப்பாய் ஒருவரிடம் இருந்த AK47 ரக துப்பாக்கி ஒன்றை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பறித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 குறித்த பகுதியில் சட்டவிரோத மரம் கடத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த இராணுவத்தினர் முற்பட்டுள்ளனர்.    இதன் போது இராணுவச்சிப்பாய் ஒருவர் வைத்திந்த AK47 துப்பாக்கியை சட்டவிரோத மரம் கடத்தமுற்பட்ட நபர் ஒருவர் பறித்துகொண்டு தப்பியோடியுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

 குறித்த சந்தேக நபரை வலைவீசி தேடும் நடவடிக்கையில் காவற்துறையினரும் இராணுவத்தினரும் ஈடபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.Powered by Blogger.