முதிரைப் பலகைகளை கடத்தியவர் கைது!

வவுனியா மடுக்குளத்தில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட முதிரை பலகைகள், நிலை செய்ய பயன்படும் முதிரை குற்றி (தீராந்தி) மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் வாகன சாரதியையும் கைது செய்துள்ளதாக வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..,

வவுனியா ஈச்சங்குளத்தில் இரவு நேர கடமையில் ஈடுபட்ட பொலிஸாரினால் முதுரை மர பலகைகள் ஏற்றிச்சென்ற கப்ரக வாகனம் ஒன்றினை நிறுத்துமாறு சைகை செய்தள்ளனர்.

இருந்த போதும் அச் சைகையினை மீறி அவ்வாகனம் மிக வேகமாக சென்றுள்ளது. இவ்வாறு சென்ற வாகனத்தினை ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஸ் ஆரியரத்தின தலைமையின் கீழ் பொலிஸ் சாஜன்களான குமாரசிங்க, குலதுங்க, மற்றும் பொலிஸ் கொஸ்தாப மதுர, குமார, தசாநாயக்க, இர்பான், கரன், அவதிசிங்க, மன்சுல, பாரதிராஜா ஆகியோர் அடங்கிய குழுவினரால் துரத்தி பிடிக்கப்பட்டதுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் சுமார் இரண்டரை இலட்சம் பெறுமதியான முதிரை மர பலகைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் பண்டாரிக்குளத்தை சேர்ந்த 22 வயதுடைய ஸ்ரீதரன் சுகிர்தன் என்ற வாகன சாரதியை கைது செய்து இன்று வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Powered by Blogger.