தொண்டராசிரியர்களை கைவிடமாட்டடோம்!

வடக்கு மக்களின் அபிவிருத்திகளுக்கு வடக்கு மக்களே தடையாக இருக்க கூடாது என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கூறினார்.

வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டமாக நியமனம் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இன்று வியாழக்கிழமை கல்வியமைச்சில் நடைபெற்றது.

இதன் போது உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் இவ்வாறு தெரிவித்தார். 

30 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக வடக்கின் அனைத்துவிதமான அபிவிருத்திகளும் ஸ்தப்பிதம் அடைந்து விட்டது.

குறிப்பாக இலங்கையில் கல்வியின் முதல் மாவட்டமாக காணப்பட்ட யாழ் மாவட்டம் தற்போது பின் தள்ளபட்டு உள்ளது.

இதனை அபிவிருத்தி செய்ய பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் சிபாரிசுக்கு அமைய 10 ஆண்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கபடவுள்ளன.

அது மட்டுமல்லாது குறித்த காலத்தில் வடமாகாண கல்வி அபிவிருத்திக்கு கல்வி அமைச்சு பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்து செயற்பட்டு கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதில் ஒன்று வட மாகாண தொண்டர் ஆசிரியர் நியமனம் இந்த நியமனம் தொடர்பாக சுமார் 02 வருடங்களாக பேசி பல்வேநு நடவடிக்கைகளை மேற்க் கொண்டு முதற் கட்டமாக தொண்டர் ஆசிரியர்கள் 182 பேருக்கு நியமன கடிதம் வழங்கபட்டுள்ளது.

இந் நிலையில் இவர்களுக்கு நியமனம் கொடுக்க வேண்டாம்  அனைவருக்கும் ஒன்றாக  கொடுங்கள் என்றும் தங்களுக்கும் வழங்கமாட்டீர்களா? 182 பேருக்கு மாத்திரம் கொடுத்து விட்டு எங்களை ஏமாற்றி விடுவீர்களா? என்றெல்லாம் கூறி ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.

உண்மையாக யுத்த காலத்திலும் அதற்கு பின்னரும் வடக்கில் ஆசிரியர் தட்டுபாடு இருந்தபொழுது கல்விக்கும் கல்வி அமைச்சுக்கும் உறுதுணையாக இருந்த இந்த தொண்டர் ஆசிரியர்களை நாங்கள் மறக்க மாட்டோம்.

தொண்டர் ஆசிரியர்களை சுற்றுநிறுபத்திற்கு ஏற்ப உள்வாங்குவதில் ஏற்பட்ட சிக்கலும் உள்ளுராட்சி தேர்தலுமே தாமத்திற்கு காரணம்.

இவ்வாறான நிலையில்  182 பேருக்கு முதற் கட்டமாக நியமனம் வழங்குவதை எதிர்ப்பது ஏற்றுக்  கொள்ள முடியாது. மாறாக இச்செயற்பாடு வடக்கு மக்களின் அவிருத்திக்கு வடக்கு மக்களே தடையாக இருப்பதாக கருதுகின்றேன்.

தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 494  வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான நேர்முக பரீட்சை  எதிர்வரும் ஏப்ரல் மாதம்  19ஆம்¸ 20ஆம் திகதிகளில் கல்வி அமைச்சில் நடைபெற்று இரண்டாம் கட்டமாக நியமனம் வழங்க நவடிக்கைகள் மேற் கொள்ளபட்டுள்ளன.

அந்த நேர்முக பரீட்சை முடிந்ததும் உடனடியாக நியமனம் வழங்குவோம். மொத்தமாக 676 தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளன.

இவை கட்டாயம் வழங்கபடும் அது வரை பொருத்திருந்து எந்த பிரச்சனையும் இன்றி நியமனங்களை வழங்க ஒத்தழைக்க வேண்டும் என்று கூறினார்.

அதேவேளை  முதல் கட்டமாக 182  வட மகாண தொண்டர் ஆசிரியர்களுக்கும்; ஓப்பந்த அடிப்படையிலான 142 ஆசியர்களுக்கும் மொத்தமாக 324 நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர்  வே.இராதாகிருஸ்ணன் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்குரே கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராட்சி உட்பட கல்வி அமைச்சின் மேலதிக செலாளரகள் அதிகாரிகள் உத்தியோகஸ்த்தர்கள்  ஆகியோர் கலந்துக் கொண்டமையும் குறிப்பிடதக்கது .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.