ஐ.நா.வில் வெடித்த பிரித்தானிய பிரபுவின் சர்ச்சை!

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக, பிரித்தானிய பிரபு நசெபி தெரிவித்த கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லையென ஐ.நா.வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் பக்க அமர்வாக நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற அமர்வில், இவ்விடயம் குறித்து பேசப்பட்டது.
இறுதிக்கட்ட யுத்தத்தில் வெறும் 8000 பேரே உயிரிழந்தனர் என பிரபு நசெபி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவித்திருந்தார். இதனை மேற்கோள்காட்டி, அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர் சிங்கள பிரதிநிதியொருவர் நேற்று கேள்வி தொடுத்துள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரித்தானிய பிரதிநிதிகள், பிரித்தானியாவின் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக இவ்விடயம் தொடர்பில் தகவல் கோரியதாகவும், அதில் பிரபு நசெபியின் கருத்து உண்மைக்கு புறம்பானதென தெரிவிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Powered by Blogger.