மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்க முயன்றதா இலங்கை?

இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சிலர், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைனை சந்திப்பதற்கான முயற்சியை மேற்கொண்டிருப்பதாகதெரிவிக்கப்படுகிறது.
21ம் திகதி இலங்கை குறித்த அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கவுள்ளநிலையில், அதற்கு முன்னதாக இந்த சந்திப்பை நடத்த அரசாங்கம் முயற்சிஎடுத்துள்ளது.
ஆனால் இலங்கை பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கையை, மனித உரிமைகள் பேரவைநிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த செயதியை இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார பேச்சாளர்மஹிசினி கொலன்னே நிராகரித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் அவ்வாறான கோரிக்கை எதனையும் மனித உரிமைகள் பேரவையிடம்முன்வைக்கவில்லை என்று அவர் தமது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.