யாழில் தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தை முற்றுகை!

இன்று பிற்பகல் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தை காணாமல் ஆக்கப்பட்வர்களின் உறவினர்கள் முற்றுகையிட்டு போரட்டம் நடத்தினர்.

எதிர் கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். இந்த நிலையிலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்தப் போராட்டத்தை இன்று முன்னெடுத்தனர்.


யாழ்ப்பாணம் மாட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவுகள் கூட்டமைப்பினருக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர்.
தமது பிள்ளைகளின் நிலமைகள் தொடர்பில் அக்கறையில்லாமல் பதவி சுகபோகங்களை அனுபவித்துவரும் கூட்டமைப்பினர் உடனடியாக தமது பதவிகளிலிருந்து விலகவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நிலமைகள் தொடர்பில் உரிய பதிலை விரைவில் வழங்கத்தவறும் பட்சத்தில் வடக்கிலுள்ள சகல கூட்டமைப்பு அலுவலகங்களையும் முற்றுகையிட்டு போராடப்போவதாகவும் உறவுகள் எச்சரிக்கை விடுத்தனர்.
Powered by Blogger.