ஆசிரியர்களுக்கு சலுகைகள்!

ஓய்வு பெறும் வயதெல்லையை அண்மித்துள்ள ஆசிரியர்களுக்கு தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தின் போது சலுகை வழங்குமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

58 மற்றும் 59 வயதுடைய ஆசிரியர்கள் தற்போது சேவையாற்றும் அதே பாடசாலைகளில் தமது விருப்பத்திற்கமைவாக ஓய்வு பெறும் வரை சேவையாற்றுவதற்கு அவகாசம் வழங்குமாறு கல்வியமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது. 

10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றும் 6 -11 ம் தர ஆசிரியர்கள் 5473 பேருக்கு இம்மாத இறுதியில் வழங்கப்படவுள்ள இடமாற்றத்தின் ​போது இதனை கடைபிடிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் மூன்று கட்டங்களாக இடம்பெறுவதுடன், இதன் முதல் கட்டம் கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

இந்த இடமாற்றம் வழங்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டம் இம்மாத இறுதியில் இடம்பெற உள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.
Powered by Blogger.