கழிவுகள் மூலம் சேதனப் பசளை தயாரிக்கும் திட்டம்!

நீர்வேலி தரவைப் பகுதியில் உள்ள திண்மக் கழிவுகள் சேகரிக்கும் நிலையத்தில்
தரம்பிரிக்கப்படும் கழிவுகள்மூலம் சேதனப் பசளை தயாரிக்கும் திட்டத்தை ஆரம்பிக்க வலி.கிழக்கு பிரதேசசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வலி.கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகள் அனைத்தும் இந்த கழிவுகள் சேகரிக்கும் நிலையத்தில் கொட்டப்பட்டு உக்கும் உக்காத பொருள்கள் என்ற அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டும் வருகின்றன.

இதில் உக்கும் கழிவுகள் மூலம் சேதன பசளையை தயாரிக்கும் சபை ஒன்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் பசளை தயாரிப்பதற்கு உரிய இயந்திர சாதனங்களை பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.