ஊர்காவற்றுறை கர்ப்பிணி பெண் கொலை வழக்கு விரைவில் விசாரனை!

ஊர்காவற்றுறை கர்ப்பிணி பெண் கொலை வழக்கின் குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணைகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக மன்று தெரிவித்துள்ளது.இக் கொலை வழக்கானது இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரசைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான் இதனை தெரிவித்தார். நேற்றைய வழக்கு விசாரணையின் போது வழக்கின் விசாரணையை குற்றப் புலனாய்வு பிரிவினர் ஆரம்பதில் ஏன் தாமதம் காணப்படுவதாக சட்டத்தரணி ஷாலினி மன்றை வினவியிருந்தார். இதற்கு பதிழலிக்கும் போதே நீதிவான், இவ் வழக்கின் விசாரணையை ஆரம்பிப்பதற்கான அறிவுறுத்தல்களை தாம் அனுப்பியுள்ளதாகவும் விரைவில் விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் ஆரம்பிப்பார்கள் எனவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன் அதுவரை குறித்த இருவரையும் விளக்கமறியலில் வைக்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.
Powered by Blogger.