முல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்ப்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 10 உழவியந்திரங்களும் சாரதியினரையும் புதுக்குடியிருப்பு பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள். 21.03.18 அன்று காலை சுதந்திரபுரம் பகுதியில் உழவு இயந்திரம் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறல் மற்றும் அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் அகழ்வில் ஈடுபட்ட 10 உழவியந்திரங்களும் சாரதிகளையும் கைதுசெய்த புதுக்குடியிருப்பு பொலீஸார் உழவியந்திரங்களை பொலீஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்கள் .
Powered by Blogger.