நீதிக்கட்டமைப்பு திருத்த சட்டமூலம் சபாநாயகருக்கு அனுப்பி வைப்பு!

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதிக்கட்டமைப்பு திருத்த சட்டமூலம் சம்பந்தமான மனுவை விசாரணை செய்து இறுதி தீர்மானத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பிவைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த மனு பிரதம நீதியரசர் பிரியசத் டெப், புவனேகா அலுவிஹாரே மற்றும் நலின் பெரேரா ஆகிய மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்டவர்கள் இணைந்து சட்டமூலத்துக்கு எதிரான இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர். அந்த சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில விதிமுறைகள், நீதித்துறைக்கு இருக்கின்ற அதிகாரங்கள் அரசாங்கத்தால் பறிக்கப்படுவதாக அமைந்துள்ளது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாகும் எதிராகவும் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பாக கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்று வந்த விசாரணையின் பின்னர் இன்றைய தினம் விசாரணை முடிவுக்கு வந்திருந்ததுடன், இதன் இறுதி இரகசிய தீர்மானத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பிவைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Powered by Blogger.