நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் அச்சமடையப் போவதில்லை!

கூட்டு எதிர்க்கட்சியால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் அச்சமடையப் போவதில்லை என்றும் அதனை பெரும்பான்மையால் தோற்கடிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறியுள்ளார். இன்று களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறினார். நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரக் காரணம், மோசடிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றம் ஸ்தாபிப்பதை தடுப்பதே என்று அவர் மேலும் கூறியுள்ளார். மோசடிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றம் ஸ்தாபிப்பதன் மூலம் கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கின்ற தப்பானவர்களை சிறையிலடைக்கும் நடவடிக்கையை தடுப்பதற்கான இறுதி முயற்சியே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை என்று அவர் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கும் சந்தர்ப்பங்களில் மஹிந்த ராஜபக்‌ஷ இருந்ததில்லை என்றும், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடக்கும் தினத்தில் அவர் நிச்சயமாக பாராளுமன்றத்திற்கு வரப் போவதில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா மேலும் கூறியுள்ளார்.
Powered by Blogger.