பேருந்து சில்லில் சிக்குண்டு பெண் காயம்!

லக்ஷபான ஹங்ராம்பிட்டியவிலிருந்து பயணிகளை ஏற்றிவந்த இலங்கை போக்குவரத்துப் பிரிவுக்குச் சொந்தமான பேருந்து வண்டியின் பின் சில்லில் சிக்குண்ட பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
கினிகத்தேன பஸ் நிலைய வளாகத்தில் பொது சந்தைக்கருகிளே 29.03.2018 பகல் 2.15 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்து வண்டியின் பின் சில்லில் சிக்குண்ட பெண் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாகவும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கினிகத்தேனை பஸ் தரிப்பிடவளாகத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் பொது சந்தை இயங்கி வருகின்ற நிலையில் குறித்த பொது சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுமாறு இலங்கை போக்குவரத்து பேருந்து மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களும் கினிகத்தேனை அம்பகமுவ பிரதேசசபைக்கு அறிவித்துள்ள போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.
Powered by Blogger.