அப்பாவை வீட்ட விடுங்கள்!

கொழும்பு மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலையை கோருமாறு அவரது பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரடியாக சந்தித்து கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

ஜனாதிபதியை நேரில் சந்திப்பதற்காக ஆனந்த சுதாகரரின் பிள்ளைகள் இருவரும் உறவினர்களுடன் இன்று வியாழக்கிழமை காலை கொழும்புக்கு விஜயம் செய்தனர்.

பிள்ளைகள் இருவரும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தங்களது தந்தையை விடுதலை செய்யுமாறு உருக்கத்துடன் கடிதம் எழுதியிருந்ததை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய பிள்ளைகள் இருவரும், மற்றொரு கோரிக்கை மடல் ஒன்றையும், மகஜர் ஒன்றையும் ஜனாதிபதியிடம் கையளித்திருப்பதாக அறியமுடிகின்றது.

எவ்வாறாயினும் இந்த சந்திப்பை செய்தியாக ஊடகங்களுக்கு அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவுக்கு வழங்கப்படவில்லை என்று மற்றொரு தகவல் கூறுகின்றது.
Powered by Blogger.