சுட்டுக்கொல்லப்பட்ட மெய்பாதுகாவலரின் மகள் பரீட்சையில் சிறந்த பெறுபேறு!

யாழ்ப்பாணத்தில் நல்லூர் வீதியில் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின்  மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜனது மகள் கா.பொ.த சாதாரன தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.

நேற்று நள்ளிரவு வெளியான பெறுகளில் சமாதி ஆமந்தா ஹேமசந்திர என்ற பொலிஸ் சார்ஜனது மகள் 6 "ஏ" தர சித்தியினையும், 2 "பி" சித்தியுனையும், 1 "சி" சித்தியுமாக ஒன்பது பாடங்களிலும் குறித்த மாணவி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஜீலை மாதம் நல்லூர் பகுதியில் வைத்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நீதிபதி மயிரிளையில் தப்பித்துக்கொள்ள அவரது நீண்ட நாள் மெய் பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன் ஹேமசந்திர துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தார்.

இதனையடுத்து குறித்த பொலிஸ் சார்ஜனது பிள்ளைகள் கல்வி கற்று முடிக்கும் வரை எல்லா கல்வி செலவுகளையும்  தாம் பொறுப்பேற்பதாக நீதிபதி இளஞ்செழியன் உறுதியளித்திருந்தார். இந்நிலையிலேயே குறித்த அம் மாணவி இச் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.