அர்ஜுன மஹேந்திரனை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு!

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு கடந்த 15 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் இன்று (29) மீண்டும் பிடியாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.