மட்டு- சுற்றுலா வளர்ச்சிக்கான மூலோபாய செயல் திட்டம்!

மட்டக்களப்பில் சுற்றுலா வளர்ச்சிக்கான மூலோபாய செயல் திட்டம் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்
சந்திம வீரக்கொடி மற்றும் அவுஸ்திரேலியாவின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அபிவிருத்தி ஒத்துழைப்புத் தலைவர் விகடோரியா கொக்லே ஆகியோரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் உல்லாச விடுதியில் இன்று (28) இடம்பெற்றது.

இந்த ஆரம்ப நிகழ்வில் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் சந்திரசிறி, மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார், 'உள்வாங்கல் வளர்சிக்கான ஆற்றல்' நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் அதிகாரி சந்துனி ஸ்ரீபால, மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மரினா உமேஸ் உள்ளிட்ட பல அதிகாரிகளும், சுற்றுலாத் துறை சார்ந்தோரும் கலந்து கொண்டனர்.
Powered by Blogger.