வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு அழைத்துவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது!

யுத்தகாலப்பகுதியில் இடம்பெற்றதாக  கூறப்படும் குற்றச்செயல்களை விசாரணை செய்ய,  வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு அழைத்துவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதென, விசேட  வேலைத்திட்டங்கள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
நாட்டில் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட்டு வரும் நிலையில்  வெளிநாட்டு நீதிபதிகளை அழைத்து வந்து வழக்கு விசாரணைகளை நடத்துவதற்கு எந்த தேவையும் இல்லை என, அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் குறித்து ஜெனீவா மனித உரிமைகள் பேரவையிலும் கருத்து தெரிவித்துள்ளதாக, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Powered by Blogger.