வெலிகடை துப்பாக்கிச் சூடு சம்பவம் - சந்தேகநபர்கள் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு !

 வெலிகடை சிறைச்சாலையில் இடம்பெற்ற  துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும்  நியோமால் ரங்கஜீவ ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பின்னர் குறித்த இருவரும், திடீர் சுகயீனமுற்றதால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திசாநாயக்க வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டு குறித்த இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.