மெர்சல் படைத்த மற்றொரு சாதனை!


தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் மெர்சல். தெறி படத்திற்குப் பிறகு இயக்குநர் அட்லி, மீண்டும் இந்தப்படத்தை விஜய்யை வைத்து இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படம், பாடல்கள் என கடந்த வருடம் இது ரசிகர்களிடயே மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த 'ஆளப் போறான் தமிழன்' என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் செம்ம ஹிட். தற்போது இந்த ஆளப்போறான் தமிழன் பாடல் saavan என்ற App-ல் ஒரு கோடி பேர் கேட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடுகிறார்கள்.
Powered by Blogger.