பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான கபாலி பட நடிகை!

கபாலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்த ராதிகா ஆப்தே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இடம்பெற்ற டி.வி பேட்டி ஒன்றில் தமிழ் மொழியில் நடிக்கும் போது தனக்கும் அப்படி ஒரு அனுபவம் நேர்ந்ததாக ஆப்தே தெரிவித்துள்ளார்.
முதல் நாள் படப்பிடிப்பில் பிரபலமான நடிகர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்க முயன்றதாகவும், அதன்போது கோபமடைந்து அவரை அடித்துவிட்டதாகவும் அந்தப் பேட்டியில் ராதிகா தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் ‘ரக்த சரித்திரா’ படத்தில் அறிமுகமாகி அதன் பின் பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி படத்தில் நடித்திருக்கிறார்.
தனது பேட்டியில் அந்த நடிகர் யார் என்பதை ராதிகா சொல்லவில்லை. அதனால் அவரிடம் அடி வாங்கிய அந்த பிரபல நடிகர் யார் என்பதும் புரியாத புதிராகவே உள்ளது.
Powered by Blogger.