பளையில் விபத்து - சாரதி படுகாயம்!

பளை புதுக்காட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பட்டா ரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கடைக் கட்டடத்துடன் மோதி
விபத்துக்குள்ளாகியது. அதனைச் செலுத்தி வந்த சாரதி படுகாயமடைந்தார்.

இந்த விபத்து இன்று மதியம் நடந்தது. விபத்தில் காயமடைந்தவர் பளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் சமந்குமாரா (வயது 42) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்துத் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.