‘ஸ்லீப்பர் செல்’ புகழ் தினகரனும் பாஜகவின் ஆபரேஷன் திராவிடத்தின் அங்கம்?

அதிமுகவில் இருந்து விலகியதாக அல்லது நீக்கப்பட்டதில் இருந்து டிடிவி. தினகரன் தொடர்ந்து சொல்லி வருவது தனக்கான ஸ்லீப்பர் செல் எம்பி, எம்எல்ஏக்கள் இருக்கின்றனர் என்பது தான். ஆனால் இன்று வரை அந்த ஸ்லீப்பர் செல்கள் வெளிவந்ததாக தெரியவில்லை, ஆனால் ஒரு வேளை பாஜக போடும் ஆபரேஷன் திராவிடத்துக்கான ஸ்லீப்பர் செல்லாக தினகரன் இருக்கலாம் என்ற பார்வையில் அரசியல் லென்ஸ் பார்வை நீள்கிறது.
தெலுங்கு நடிகர் சிவாஜி போட்டு உடைத்த ஆபரேஷன் திராவிடம் ரகசியம் தமிழக அரசியலில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில் தென் இந்தியாவை குறிவைத்து காய் நகர்த்த ரூ.4,800 கோடியில் ஆபரேஷன் திராவிடம் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சொன்ன காரணங்களும் தமிழக அரசியலில் அரங்கேறும் நிகழ்வுகளும் அச்சு அசலாக ஒத்துபோகின்றன.
பாஜக மாநிலக் கட்சிகளோடு கைகோர்த்துக் கொண்டு ஸ்லீப்பர் செல்கள் மூலம் ஆட்சியை கைபற்ற நினைக்கிறது என்பது தான் ஆபரேஷன் திராவிடத்தின் அஜென்டா. ஏற்கனவே இதற்கான பணிகளை பாஜக தொடங்கிவிட்டதாகவும் 2019 தேர்தல்களில் தென்இந்தியாவில் கால்தடம் பதிக்கவே இந்த முயற்சி என்றும் போட்டு உடைத்தார் தெலுங்கு நடிகர்.
Powered by Blogger.