மலேசியாவில் பல் மருத்துவ நிபுணர்கள் மாநாடு!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சிறப்பு பல் மருத்துவ நிபுணர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முகம் மற்றும் தாடை சீரமைப்பு நிபுணர்கள், பற்கள் சீரமைப்பு நிபுணர்கள், குழந்தை பல் மருத்துவர்கள், செயற்கை பல் நிபுணர்கள், பல் வேர் சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட ஒரே இந்திய பிரதிநிதி சென்னையை சேர்ந்த வாய், முகத்தாடை மற்றும் பல் சீரமைப்பு நிபுணர் டாக்டர் குணசீலன் ராஜன் ஆவார். மாநாட்டில், முழுமையாக பற்கள் இழந்தவர்களுக்கு நிரந்தர செயற்கை பற்கள் பொருத்தும் அதிநவீன சிகிச்சை குறித்து டாக்டர் குணசீலன் ராஜன் பேசினார். அப்போது அவரை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
சிறப்பு பல் மருத்துவ நிபுணர்கள் மாநாடு மலேசியா நாட்டில் நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.