இன்று யாழ்ப்பாணம் வருகின்றார் முன்னாள் ஜனாதிபதி!

நல்லிணக்க செயலணியின் தலைவியும் முன்னாள் ஐனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மூன்று நாள் விஐயமாக இன்றையதினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.

 இன்று காலை யாழ் வரும் சந்திரிகா யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறும் நிகழ்வில் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் அமைசச்சர் மங்கள சமரவீர மற்றும் மத்திய வங்கி ஆளுநர் உட்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

 இதனைத் தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை அரியாலை மருதங்கேணி, காரைநகர், உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்று பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார். அதே போன்று மறு நாள் திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்டத்துக்குச் சென்று அங்கும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
Powered by Blogger.