நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எல்லோரினதும் ஆதரவு வேண்டும்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் மட்டுமல்லாது நாடாளவிய ரீதியில் இருக்கின்ற தமிழ் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் ஆதரவு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

ஹட்டனில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது, இன்று (வெள்ளிக்கிழமை) அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு முழுயைான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் தான் சிறுபான்மை மக்கள் இந்த நாட்டிலே பாதுகாக்கப்படுவார்கள்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு புதிய ஒரு பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவாக அல்லாமல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தெரிவின் கீழ் இருக்கின்ற நிமால் சிறிபால டி சில்வா அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிரேஷ்ட பிரமுகர்களில் ஒருவர்தான் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து மீண்டும் ஒரு இனவாதியை இந்த நாட்டில் உருவாக்க கூடாது” எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.