பொன்சேகா இராணுவ சீருடையில் பாராளுமன்றத்திற்கு வருகை தர முடியுமா?

பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவ சீருடையில் பாராளுமன்றத்திற்கு வருகை தர முடியுமா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

அத்துடன் சரத் பொன்சேகாவுக்கு தற்போது இராணுவ நடவடிக்கைகள் சார்ந்த எந்தவொரு அதிகாரங்களும் இல்லை என இதன்போது ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான வினா நேரதத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எழுப்பிய மேலதிக கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Powered by Blogger.