ஆர்யாவிடம் இலங்கை பெண் சுசானா!


நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் வேலையை ஒரு தொலைக்காட்சி மிகவும் பிரம்மாண்டமாக செய்து வருகின்றனர். அதன் முதல்படியாக அவர்களே 16 பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களில் இருந்து ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து கொள்ளுமாறு ஆர்யாவிடம் பொறுப்பை கொடுத்துள்ளனர். ஆர்யாவும் நிறைய போட்டிகள் எல்லாம் வைத்து யார் யார் எப்படி செய்கிறார்கள், சில விஷயங்களில் குணம் எப்படி இருக்கிறது என்பன போன்ற நிறைய விஷயங்களை கவனமாக பார்த்து வருகிறார். 16 பெண்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இப்போது 8 பெண்கள் தான் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக நடிகைகள் அனுராதா மற்றும் சுஜிதா கலந்து கொண்டனர். அவர்களும் பெண்களுக்கு சில போட்டிகள் வைத்தனர். அதில் சுசானாவுக்கு, ஆர்யாவின் சட்டை பட்டனை தைக்குமாறு கூறியுள்ளனர். அவரும் அதை சிறப்பாக முடித்து நடிகைகளிடம் பாராட்டும் பெற்றார். ஆனால் அவர் அழகாக பட்டனை தைத்தது மற்ற பெண்களுக்கு பிடிக்கவில்லையாம். இதை அவர்களே நிகழ்ச்சியில் கூறியுள்ளனர்.
Powered by Blogger.