இன்று கூடுகிறது ஐக்கிய தேசிய முன்னணி!

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம், அலரிமாளிகையில் இன்று (29) இடம்பெறவுள்ளது. இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஆராயப்படவுள்ளதெனவும், கட்சி என்ற ரீதியில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும், அமைச்சரவை இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியில் மறுசீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.
Powered by Blogger.