காலி மாநகர சபையின் புதிய மேயராக பிரியந்த சகபந்து !

காலி மாநகர சபையின் புதிய மேயராக, ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுனவின் பிரியந்த சகபந்து கொடகே இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த இரகசிய வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரியந்த சகபந்துவுக்கு ஆதரவாக 20 வாக்குகளும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜிலித் நிஷாந்தவுக்கு 11 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் காலி மாநகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பாக 14 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுன சார்பில் 13 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.