நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தயான் லன்சா!

நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தயான் லன்சா வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தயான் லன்சாவுக்கு ஆதரவாக 25 வாக்குகளும் ஐக்கிய தேசிய கட்சியின் ரோஸி பெர்ணான்டோவுக்கு 19 வாக்குகளும் கிடைக்கப்பபெற்றுள்ளன.

நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் நீர்கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பாக 19 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 16 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.