வெளிநாடுகளில் பணியாற்ற சென்று மரணிபவர் தொடர்பில் புதிய நடைமுறை!

வெளிநாடுகளில் பணியாற்ற சென்று மரணிக்கும் இலங்கையர் தொடர்பான புதிய நடைமுறை ஒன்றை வெளிவிவகாரத்துறை அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

 இதற்கு அமைய மரணிப்பவர்களின் உறவினர்கள், மரணமானவர் தொடர்பான அடையாள ஆவணங்கள், சத்தியகடதாசிகள் மற்றும் அவர்கள் தொடர்பான விபரங்களை வெளிவிவகாரத்துறை அமைச்சிற்கு தமது பிரதேச செயலாளர்கள் மூலம் கையளிக்க முடியும்.

 இதற்கு அமைய மரணமானவர்களின் நாடுகளில் உள்ள தூதுவராலயங்கள் மூலம் இறுதி கிரிகைகள் மேற்கொள்ளப்பட்டு, அது தொடர்பான விபரங்கள் உறவினர்களுக்கு அறிவிப்பதற்குமான ஒழுங்குகள் செய்யப்படுகின்றன.

 இது தொடர்பான சுற்றறிக்கை சகல பிரதேச செயலாளர்களுக்கும், உட்துறை அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய ஒத்துழைப்பினை வழங்கும் படியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இது தவிர, பாதிக்கப்பட்ட உறவினர்கள் வெளிவிவகார அமைச்சிற்கு வருகை தராமல், குறிப்பிட்ட ஆவணங்களை தமது பிரதேச செயலாளர்களிடம் கையளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Powered by Blogger.