முதல்தர வீராங்கனையை வீழ்த்தி இறுதிபோட்டிக்குள் ஒசாகா!

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் இந்தியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் நவோமி ஒசாகா, உலகின் முதல்
நிலை வீராங்கனையான ரோமேனியாவின் சிமொனா ஹெலப்பை தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில், ரோமேனியாவின் சிமொனா ஹெலப், ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், ஒசாகாவிற்கு கடும் நெருக்கடி கொடுத்து இறுதிபோட்டிக்கு இலகுவாக முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஹெலப், எவ்வித போராட்டமும் இன்றி நவோமி ஒசாகாவிடம் 6-3,6-0 என்ற செட்கள் கணக்கில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறினார்.

இதன்படி, இந்தியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிபோட்டியில், ரஷ்யாவின் டாரியா கசட்கினாவும், ஜப்பானின் நவோமி ஒசாகாவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

Powered by Blogger.