வீனஸிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த டாரியா கசட்கினா!

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் இந்தியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியுள்ளார்.
இன்று (சனிக்கிழமை) கலிபோர்னியாவில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், ரஷ்யாவின் டாரியா கசட்கினாவை எதிர்கொண்டு தோல்வியடைந்தார்.
இந்த தொடரில் வீனஸ் சம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிர்ச்சி தோல்வியடைந்து கண்ணீருடன் அரங்கை விட்டு வெளியேறியது அனைவரையும் சோகத்திற்கு ஆளாக்கியுள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை வீனஸ் 6-4 என கைப்பற்றினார். இதே உத்வேகத்துடன் அவர் இரண்டாவது செட்டையும் கைப்பற்றி வெற்றிபெறுவார் என எதிர்பாரக்கட்ட போது, அவருக்கு அதிர்ச்சி கொடுத்தார் டாரியா கசட்கினா.
இரண்டாவது செட்டில் வீறு கொண்டெழுந்த டாரியா கசட்கினா, இரண்டாவது செட்டை 6-4 என கைப்பற்றி வீனஸிற்கு நெருக்கடி கொடுத்தார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் பரபரப்படைந்தது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக அதிரடியாக விளையாடிய டாரியா கசட்கினா, வீனஸிற்கு மட்டுமல்ல இரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்து போராடி 7-5 செட்டை கைப்பற்றி இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.
Powered by Blogger.