எரி​பொருட்களின் விலைகளை நாம் அதிகரிக்கவில்லை!

எரி​பொருட்களின் விலைகளை தாம் அதிகரிக்கவில்லையென தெரிவிக்கும் சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க, ​எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துக்கொள்வது தொடர்பில், லங்கா ஐ.​ஓ.சி நிறுவனம், அரசாங்கத்துடன் ஆலோசிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

ஐ.ஓ.சி நிறுவனம், ஒரு லீற்றர் டீசலின் விலையை 5 ரூபாயினாலும், ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 9 ரூபாயினாலும் கடந்த வௌ்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரித்திருந்தது.

இந்த விலையேற்றம் தொடர்பில், கூட்டுத்தாபனத்தில் தலைவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

எரிபொருட்களின் விலைகளை, லங்கா ஐ.ஓ.சி அதிகரித்துள்ள போதிலும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக விநியோகிக்கப்படும், எரிபொருட்களின் விலைகளில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 

பெற்றோலிய கூட்டுத்தாபனம், வெறுமனே இலாபத்தை மட்டும் இலக்காக கொண்டு செயற்படும் நிறுவனம் அல்ல என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க, மக்களை கவனத்தில் கொண்டே தீர்மானங்கள் எட்டப்படுமென தெரிவித்தார்.    “இதேவேளை, விலைமாற்றம் தொடர்பில் எவ்விதமான கலந்துரையாடல்களும் இதுவரையிலும் மேற்கொள்ளப்படவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   
Powered by Blogger.