சுதந்திரக் கட்சியைச்​ சேர்ந்த மூவருக்கு எதிராக முறைப்பாடு !

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் ​பிரேரணையில் கையொப்பமிட்டுள்ள, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச்​ சேர்ந்த மூவருக்கு எதிராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் கையக்கப்பட்டுள்ள அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில், பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, துறைமுகங்கள் மற்றும் கப்பல் விவகார பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம மற்றும் காணி இராஜாங்க அமைச்சர் டி.பீ. ஏக்கநாயக்க ஆகியோ​​ரே கையொப்பமிட்டுள்ளனர். 
அரசாங்கத்துக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ள, இந்த மூவருக்கெதிராகவும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.    
Powered by Blogger.