நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 116 உறுப்பினர்களுக்கு அதிகமானோர் ஆதரவு !

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரசாங்கம் மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 116 உறுப்பினர்களுக்கு அதிகமானோர் ஆதரவு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளனர் எனத் தெரிவித்த ஒன்றிணைந்த எதிரணியின் ரஞ்சித் சொய்சா எம்.பி, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிக்கொள்வோம் என்றார். 
புஞ்​சி பொரளையில் உள்ள வஜிராராமை விகாரையில் நேற்று (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போ​தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், “பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு, ஆளுங்கட்சி, ஜே.வி.பி, ஒன்றிணைந்த எதிரணிகள் உறுப்பினர்கள் உள்ளனர்” என்றார். 
“எனவே, எதிர்வரும் 4ஆம் திகதியன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகவுள்ளதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. அத்துடன், பிரதமருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் எதிர்ப்புகள் உருவாகியுள்ளன” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.    

No comments

Powered by Blogger.