மறைமுக வரிக்கொள்கை​யை குறைப்பதற்கு இருக்கின்ற ஒரேயொரு வரி, நேரடி வரியாகும் !

நாட்டின் மறைமுக வரிக்கொள்கை​யை குறைப்பதற்கு இருக்கின்ற ஒரேயொரு வரி, நேரடி வரியாகும் எனத் தெரிவித்த நிதியமைச்சர் மங்கள சமரவீர, சாதாரண மக்கள் மீது திணிக்கப்பட்டிருந்த இந்த மறைமுக வரியை குறைக்கவேண்டுமாயின், நேரடி வரியை அதிகரிக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.  
நேற்றுமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய உள்நாட்டு வருவாய் சட்டம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
“நாட்டில் வாழ்கின்றவர்களில் மிகவும் குறைந்த 18 சதவீதமானோரே வருமான வரி செலுத்துகின்றனர். மிகுதியாகவுள்ள 82 சதவீதமானோர் மறைமுக வரிகளையே செலுத்துகின்றனர். இது சாதாரண மக்கள் மீது திணிக்கப்பட்டிருந்த வரிச்சுமையாகும். அந்த மறைமுக வரி அறவிடுதலை ​இல்லாமல் செய்யும் வகையிலேயே புதிய வரிச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது” என்றார். 
மறைமுக வரியை குறைப்பதற்கான ஒரேயொரு முறைமையானது. நேரடி வரிவருமானத்தை அதிகரிப்பதாகும் என்றும் குறிப்பிட்ட அவர், பழைய முறைமையின் கீழ், கடைகளுக்குச் செல்கின்ற தொழிலாளர்கள் செலுத்துகின்ற வரியையே, வர்த்தகர்களும் செலுத்துகின்றனர்” என்றார்.   

No comments

Powered by Blogger.