சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

சந்தேகநபரை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

சந்தேகநபரான நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ கடந்த 6 ஆம் திகதி நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.