14 வெட்டுக்களுடன் தணிக்கை சான்றிதழை பெற்ற காலா?


பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படம் 14 வெட்டுக்களுடன் தணிக்கை சான்றிதழை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kaala #KaalaCensor பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படம் 14 வெட்டுக்களுடன் தணிக்கை சான்றிதழை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kaala #KaalaCensor ‘2.0’ படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தை முதலில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. தனுஷ் தயாரித்துள்ள இந்த படத்தை ஏப்ரல் 27-ந் தேதி திரையிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், பட அதிபர்கள் போராட்டம் நடத்தி வருவதால் கடந்த ஒரு மாத காலமாக புதிய படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. ரிலீசுக்கு காத்திருக்கும் படங்கள் தணிக்கை பெற்ற தேதியை வைத்து ரிலீஸ் செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலா ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது. காலா படத்திற்கு தணிக்கை குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 14 வெட்டுக்களுடன் படம் தணிக்கை பெற்றுள்ளதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. image தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்பதாக படத்தை வெளியிடும் லைகா புரொடக்‌ஷன்ஸ் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.